சிவகார்த்திகேயன் அக்காவின் கணவர் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
சிவகார்த்திகேயன்
இன்று தமிழ் சினிமாவில் டாப் 10 இடத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய அளவில் இவருக்கு நல்ல மார்க்கெட் வந்துவிட்டது.
டாக்டர், டான் மற்றும் மாவீரன் போன்ற படங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம் அயலான்.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடையும் என கூறப்படுகிறது.
அயலானை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் எஸ்.கே. 21. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க கமல் ஹாசன் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவா.
சிவகார்த்திகேயன் அக்காவின் குடும்பம்
நடிகர் சிவகார்த்திகேயனின் அக்கா Dr. கௌரி என்பதை நாம் அறிவோம். ஆனால், அவருடைய கணவர் மற்றும் மகனை இதுவரை பலரும் பார்த்தது இல்லை.
முதல் முறையாக அவர்களுடைய புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்கா, மாமா மற்றும் அவர்களுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..