அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் அவருடைய மகன்.. எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க
சிவகார்த்திகேயன்
திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மாவீரன் எனும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படமும் வெளியாகவுள்ளது. மேலும் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே. 21 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அயலான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் சமீபத்தில் நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் மகன்
இதில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார் சிவா. அப்போது தனது மகன் குகன் தாஸ் உடன் சிவகார்த்திகேயன் ஒன்றாக அமர்ந்து இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனின் மகன் அச்சு அசல் அப்படியே அவரை போலவே இருக்கிறாரே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..