சிவகார்த்திகேயன் மகனின் லேட்டஸ்ட் கியூட் போட்டோ! இவ்வளவு வளர்ந்துட்டாரே
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் செம பிஸியான நடிகர்களில் ஒருவர். தற்போது மாவீரன் படத்தின் ரிலீசுக்காக அவர் காத்திருக்கிறார்.
ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் திரைக்கு வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து இருக்கிறார்.
மகன் போட்டோ
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அவரது மகன் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு கடந்த 2021ல் தான் மகன் பிறந்தார். அவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மகன் நடந்து செல்லும் போட்டோவை பதிவிட்டு "நீ நடந்தால் நடை அழகு" என குறிப்பிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
360 ஏக்கர் சொத்து.. ஆனால் திடீரென ஏழை ஆன ராஜமௌலியின் குடும்பம்! என்ன நடந்தது?