என் மீது எழுந்த அந்த மாதிரியான விமர்சனம், நான் வேணும்னு பண்ணல.. மனம் திறந்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் வருகிற ஜனவரி மாதம் 12 -ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், சினிமாவில் காமெடி காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு தான் இருக்கிறது. முன்பெல்லாம் காமெடி என்ற பேரில் எல்லா விஷயத்தையும் சொன்னோம் ஆனால் இப்போ அப்படி செய்ய முடியாது.
அதை நான் குறையாக பார்க்கவில்லை. என் மீதும் பல விமர்சனங்கள் இருந்தது. அதை எல்லாம் ஆக்கபூர்வமான விமர்சனமாக தான் பார்க்கிறேன். அது நான் வேண்டும் என்று செய்யவில்லை. இனி நல்ல விஷயங்களை என்னுடைய படத்தில் சேர்க்கவேண்டும் என நினைக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.