மிஷ்கினுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. ஆனால், அவருடைய இயக்கத்தில் இல்லை
முதல் முறையாக மிஷ்கினுடன் இணையும் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டான் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் Maria Ryaboshapka என்பவர் கதாநாயகியாக நடித்து வர, சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன், மண்டேலா பட இயக்குனர் அஷ்வினுடன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மாவீரன் என்று தலைப்பு வைத்துள்ளாராம்.
மேலும், இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்குனர் மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.