இயக்குனர் மிஸ்கின் உடன் இணைந்த முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் ! எதிர்பார்த்திராத காம்போ..
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் முன்னணி இயக்குனர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அதன்படி அவரின் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான டான் திரைப்படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதனிடையே சிவகார்த்திகேயன் தற்போது 21-வது திரைப்படமாக உருவாகி வரும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி மற்றும் மடோன் அஸ்வின் உள்ளிட்ட இயக்குனர்களின் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஸ்கின் வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஏற்கனவே இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாகவும் தகவல்கள் பரவின.

குக் வித் கோமாளி 3 இந்த வார எலிமினேஷன் இவர்தான்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்