மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் அக்டோபர் 31 - ம் தேதி வெளிவரவுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார்.
சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர்.

அமரன் படத்தை முடித்துவிட்டு தற்போது SK 23 படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். இதன்பின் இயக்குனர்கள் சிபி சக்ரவத்தி, சுதா கொங்கரா, வெங்கட் பிரபு என மூன்று இயக்குனர்கள் படத்தில் அடுத்தடுத்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தபோது சிவகார்த்திகேயன் அவருடைய மாமன் மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

பலரும் பார்த்திராத புகைப்படம்
இந்நிலையில், சிவகார்த்திகேயன் அவர் மனைவி ஆர்த்தியுடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் அக்காவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..

லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri