சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. எந்த படத்தில் தெரியுமா?
சிவகார்த்திகேயன்
அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் மதராஸி.
ஏ.ஆர்.முருகதாஸுடன், சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணி அமைத்த இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தற்போது சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
எந்த படத்தில் தெரியுமா?
தற்போது இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது, இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.