அரசியல் கதைக்களத்தில் சிவகார்த்திகேயன்.. இயக்குனர் யார் தெரியுமா
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே. 23 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதிய படம்
இதன்பின் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கபோவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் படம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படம் போல் இப்படம் இருக்கும் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
