23 வயதில் சிவகார்த்திகேயன் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் திரைக்கு வருகிறது. எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படம் உருவாகவுள்ளது.
அஜித் - சிவகார்த்திகேயன்
நடிகர் அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன் பகிர்ந்தார். இந்த புகைப்படம் வேற லெவலில் டிரெண்ட் ஆனது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன்பே அஜித்தின் ஏகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். ஆனால், அந்த காட்சி வெளிவரவில்லை.
அப்போது சிவகார்த்திகேயனுக்கு வயது 23 மட்டுமே. இந்நிலையில், அப்போது எடுக்கப்பட்ட அஜித் - சிவகார்த்திகேயன் காமினேஷன் புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
Also Read This : நடிகர் ஆர்கே வீட்டில் 250 சவரன் திருடிய வேலைக்காரன் சிக்கினான்! கொள்ளையடித்தது இப்படித்தான்