தனது மனைவி ஆர்த்தியுடன் சிறு வயதில் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது
நடிகர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ளது.
அதை தொடர்ந்து வெகு நாட்களாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் அயலான் திரைப்படமும் வெளியாகிறது.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் உருவாகும் எஸ்.கே. 21 படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.
இதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். ஆனால், இப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.
பலரும் பார்த்திராத புகைப்படம்
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது ஆர்த்தியுடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் அக்காவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டும் மணிமேகலை.. வெளிவந்த புகைப்படம்
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu