எஸ்.ஜே.சூர்யாவுக்கு அஜித் வாங்கி கொடுத்த கார், பைக் என்ன ஆச்சு?? - உண்மையை கூறிய நடிகர்
எஸ்.ஜே சூர்யா
தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவர் திரைத்துறையில் உதவி இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்பு இவர் திரைப்படம் இயக்கும் பணியில் இறங்கினார்.
"குஷி" மற்றும் "வாலி" மூலம் மெகா ஹிட் படங்களை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து "நியூ" திரைப்படத்தின் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி கொண்டார்.
தொடர்ந்து திரைப்படங்களில் தனது மிரட்டலான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி திரைத்துறையில் கலக்கி வரும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் அடுத்ததாக பொம்மை திரைப்படம் உருவாகி வருகிறது.
கார், பைக் என்ன ஆச்சு
இப்படம் வரும் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எஸ்.ஜே. சூர்யா "பொம்மை" திரைப் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது "வாலி" திரைப்பட சமயத்தில் அஜித் வாங்கி கொடுத்த கார் மற்றும் பைக் இப்போது எங்கே இருக்கிறது என கேள்வி எழுந்தது.
அதற்கு எஸ்.ஜே.சூர்யா "ஒரு காரின் காலம் 12 வருடங்கள் மட்டும்தான். நான் 3 ஆண்டுகள் அந்த காரை பயன்படுத்தி விட்டு எனது தந்தையின் நண்பருக்கு கொடுத்துவிட்டேன். அஜித் சார் வாங்கி கொடுத்த பைக் எனது நண்பரிடம் கொடுத்துவிட்டேன்".
மேலும் எஸ்.ஜே.சூர்யாவிடம் அஜித்தை பற்றி கேட்டதற்கு "அவர் ஒரு தனிமை விரும்பி" என கூறியுள்ளார்.
மூன்று நாட்களில் சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவவில்லையென்றாலும் நாம் உதவவேண்டும்: பிரித்தானிய முன்னாள் ராணுவத் தளபதி News Lankasri
