இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன், முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் இவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அதன்படி திரையரங்கில் வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைபடைத்தது.
அப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டான் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் முதன்முதலில் வெளியான திரைப்படம் மெரினா. இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே அவர் நடித்திருப்பார்.
மேலும் முன்பே சிவகார்த்திகேயன் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் தான் வாங்கிய முதல் சம்பளம் குறித்து பேசியுள்ளார். அதில் சிவகார்த்திகேயன் தான் வாங்கிய முதல் சம்பளம் ரூ. 10,000 என்றும் அதை இயக்குனர் பாண்டிராஜிடம் பெற்றாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும்" - புகைப்படத்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..