வசூல் ராஜா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சினேகா இல்லை.. வேறு எந்த முன்னணி நடிகை தெரியுமா
வசூல் ராஜா MBBS
இயக்குநர் சரண் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வசூல் ராஜா MBBS. ஹிந்தியில் வெளிவந்த முன்னா பாய் படத்தின் தமிழ் ரீமேக்தான் வசூல் ராஜா.
இப்படத்தில் கமலுடன் இணைந்து சினேகா, பிரபு, பிரகாஷ் ராஜ், கிரேஸி மோகன், காக்கா ராதாகிருஷ்ணன், நாகேஷ் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இன்று திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்களால் கூட இப்படியொரு நகைச்சுவை காட்சிகளை படமாக்க முடியுமா என்று தெரியவில்லை. அதற்கு கிரேஸி மோகனுக்கு தனி பாராட்டு.
முதலில் நடிக்கவிருந்த நடிகை
இப்படத்தில் கதாநாயகியாக அழகிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தவர் சினேகா. ஆனால், இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தவர் சினேகா கிடையாதாம். நடிகை ஜோதிகாதான் முதலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவருக்கு பதிலாக சினேகா தேர்வாகியுள்ளார். இந்த தகவலை பேட்டியொன்றில் இயக்குநர் சரண் கூறியுள்ளார்.