முன்னணி நடிகையாக இருந்தும் நடிகை சினேகா இழந்த விஷயம்.. என்ன தெரியுமா

Prasanna Rajinikanth Sneha
By Kathick 1 வாரம் முன்

நடிகை சினேகா

தமிழ் திரையுலகில் தனது புன்னகையால் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் புன்னகை அரசி சினேகா. என்னவளே படத்தின் மூலம் அறிமுகமான சினேகா தொடர்ந்து அஜித், விஜய், கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

முன்னணி நடிகையாக இருந்தும் நடிகை சினேகா இழந்த விஷயம்.. என்ன தெரியுமா | Sneha Missed To Act With Rajinikanth

கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்துக்கொண்டு சினேகா, சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இழந்த விஷயம்

இந்நிலையில், நடிகை சினேகா தனது திரை வாழ்க்கையில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருந்தாலும், இன்று வரை நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடியாக இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததே இல்லையாம்.

சினேகா முன்னணி நடிகையாக வலம் வந்த போதுகூட ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வரவில்லை என்றும், ரஜினியுடன் நடிக்கும் அனுபவத்தை சினேகா இழந்துவிட்டாரே என்றும் பலரும் கூறுகிறார்கள். ஆனால், குசேலன் படத்தில் இடம்பெறும் சினிமா சினிமா பாடலில் இரு ஷாட்டில் நடித்திருந்தார் சினேகா.

முன்னணி நடிகையாக இருந்தும் நடிகை சினேகா இழந்த விஷயம்.. என்ன தெரியுமா | Sneha Missed To Act With Rajinikanth

அதே போல் இனி வரும் காலத்தில் கண்டிப்பாக சினேகா ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US