சினேகா - பிரசன்னா ஜோடியின் மகன், மகளின் சமீபத்திய புகைப்படங்கள்.. எப்படி வளர்ந்துவிட்டார்கள் என்று பாருங்க
நடிகை சினேகா தனது மூத்த மகன் விஹானின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சினேகா - பிரசன்னா
அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்து வந்த சினேகா - பிரசன்னா காதலில் விழுந்து பின் 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இன்று திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வருகிறார்கள்.

சினேகா - பிரசன்னா தம்பதிக்கு விஹான் என்கிற மகனும், அத்யந்தா என்கிற மகளும் உள்ளனர். அவ்வப்போது நடிகை சினேகா தனது பிள்ளைகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.
விஹான் பிறந்தநாள்
இந்நிலையில், தற்போது தனது மகனின் 11-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது மகன் மற்றும் மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், 'சினேகாவின் மகன் மற்றும் மகளா இது? எப்படி வளர்ந்துவிட்டார்கள் பாருங்க' என கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்: