மிரட்டல் வில்லியாக நடிக்கும் நடிகை சோனியா அகர்வால்.. லேட்டஸ்ட் நியூஸ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் சோனியா அகர்வால். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகஅறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் பாப்புலர் ஆன இவருக்கு விஜய், சிம்பு என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் 'உன்னால் என்னால்' என்ற படத்தில் சோனியா அகர்வால் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ரியல் எஸ்டேட் மோசடிகளை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் இருக்குமாம்.
சமீபகாலமாக ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், ரீமா சென், சிம்ரன் போன்ற நடிகைகள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த வந்த நிலையில், தற்போது சோனியா அகர்வால் வில்லி ரோலில் நடிப்பது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிளாமர் ஆடையில் இணையவாசிகளை மிரள விட்ட மாளவிகா மோகனன்.. இதோ புகைப்படம்!

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
