பயங்கர கார் விபத்தில் சிக்கிய நடிகர் சோனு சூட் மனைவி, குடும்பம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சோனு சூட் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன மதகஜராஜா படத்திலும் அவர் தான் வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் Fateh என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் சமீபத்தில் அறிமுகம் ஆகி இருந்தார்.
மனைவி கார் விபத்து
நேற்று இரவு சோனு சூட் மனைவி சோனாலி, அவரது சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தை ஆகியோர் காரில் நாக்பூர் மற்றும் மும்பை ஹைவேயில் சென்றபோது அவர்கள் கார் விபத்தில் சிக்கி இருக்கிறது.
இதில் சோனாலி மற்றும் குழந்தை இருவரும் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அவரது சகோதரி எந்த காயமும் இன்றி தப்பி இருக்கிறார்.
சோனு சூட் தற்போது நாகபூர் சென்று மனைவியுடன் மருத்துவமனையில் இருக்கிறாராம்.