ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் பஞ்சமியின் மகன்களுக்கு காது குத்தியாக தாய் மாமன் சூரி.. புகைப்படம் இதோ
டான்ஸ் ஜோடி டான்ஸ் பஞ்சமி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மாமன் படத்தின் ப்ரோமோஷனுக்காக சூரி கலந்துகொண்டார்.
அப்போது சிறப்பாக நடனமாடி நடுவர்களிடம் இருந்தும் சூரியிடம் இருந்து பாராட்டுகளை பெற்றார் போட்டியாளர் பஞ்சமி. அப்போது நடிகர் சூரி நெகிழ்ச்சியான சம்பவத்தை செய்தார். பஞ்சமிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் மூவருக்குமே இதுவரை காது குத்தவில்லை.
காது குத்தியாக தாய் மாமன் சூரி
இந்த நிலையில், பஞ்சமியின் மூன்று பிள்ளைகளுக்கும் ஒரு தாய் மாமனாக நான் இருக்கிறேன். ஆகையால் என் மடியில் அமரவைத்து மூன்று பிள்ளைகளுக்கும் காது குத்துகிறேன் என சூரி கூறினார். சூரியின் இந்த செயலால் கண்கலங்கி நெகிழ்ந்துபோனார் பஞ்சமி.
குடும்ப உறவினர்கள் சூழ, இன்று பஞ்சமியின் மகன்களுக்கு ஒரு தாய் மாமனாக காது குத்தியுள்ளார் சூரி. இந்த விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

