மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா?
மாமன் படம்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் ஆம்பித்ததில் இருந்து நிறைய வெற்றிப் படங்கள் வெளியாகி வருகிறது.
கதைக்களத்தில் கெத்து காட்டும் படங்களை நன்கு புரிந்துகொண்டு மக்களும் வெற்றியடைய வைத்து வருகின்றனர். சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் காமெடியனாக கலக்க தொடங்கி இப்போது தன்னை ஹீரோவாக நிரூபித்து வருகிறார் சூரி.
கடந்த மே 16ம் தேதி பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாமன். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
தான் மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான உறவை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உணர்வுபூர்வமாக காட்டியுள்ளனர்.
முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் சூரியின் மாமன் திரைப்படம் தமிழகத்தில் இதுவரை ரூ. 42 கோடியும், மொத்தமாக ரூ. 47 கோடியும் வசூலித்து சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது.

நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா IBC Tamilnadu
