தனது அப்பாவின் புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் சூரி வெளியிட்ட உருக்கமான பதிவு..
படங்களில் பிஸி
தமிழ் சினிமாவின் தற்போது மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராகியுள்ளார் சூரி.
காமெடி நடிகராக ஏகப்பட்ட திரைப்படங்களில் அசதி வந்த சூரி தற்போது முக்கிய கதாபாத்திரமாகவும் வெற்றிமாறன் படத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி டாப் நடிகர்களாக உள்ள ரஜினி, சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் படத்திலும் நடித்து வந்துள்ளார் சூரி.
உருக்கமான பதிவு
தற்போது ஏகப்பட்ட படங்களை கையில் வைத்துள்ள சூரி தமிழ் சினிமாவின் செம பிஸியான நடிகராக உள்ளார்.
இந்நிலையில் தற்போது சூரி அவரை அப்பாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் "விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று! மீசை வைத்த சிங்கம் எங்கள் அப்பாவின் காலடி தடத்தில் நடந்தபடி நாங்கள்.. அப்பாவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி!" என பதிவிட்டுள்ளார்.
விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று!
— Actor Soori (@sooriofficial) March 27, 2022
மீசை வைத்த சிங்கம் எங்கள் அப்பாவின் காலடி தடத்தில் நடந்தபடி நாங்கள்..
அப்பாவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி!? pic.twitter.com/QpzxlKlz1Y
வலிமை, சர்கார் மொத்த வசூலை 2 நாளில் தாண்டிய RRR, முழு வசூல் இதோ