அப்பாவின் மிக பெரிய ரசிகை இவங்க தான்! புகைப்படத்துடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை உலகறிய செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இப்போதும் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்து வரும் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய நடிப்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது.
ரஜினியின் தீவிர ரசிகை
இந்நிலையில் நேற்று சுந்திர தினத்தை மட்டுமின்றி ரஜினி தனது 47 வருட திரையுலக பயணத்தையும் கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்களை நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்த் நேற்றைய கொண்டாட்டத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தில் “எங்களின் அன்பான Jilluma, அப்பாவின் மிக பெரிய ரசிகை மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்” என பதிவிட்டு இருக்கிறார்.
Our lovely Jilluma .. Appa’s greatest fan and the superstar of our family ????☺️☺️??? @OfficialLathaRK @rajinikanth @ash_rajinikanth pic.twitter.com/ccxVeoWRMW
— soundarya rajnikanth (@soundaryaarajni) August 16, 2022
இன்னும் ஷூட்டிங் கூட தொடங்காத நிலையில் தளபதி 67

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
