தமிழ், தெலுங்கு என கலக்கும் சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் இந்த நாயகி யார் தெரியுமா?
சிறுவயது போட்டோ
ஒவ்வொரு வருடத்திலும் சினிமாவில் ஒரு டிரண்ட் இருக்கும். அப்படி இப்போது சமூக வலைதளங்களில் டிரண்டாக ஓடிக் கொண்டிருக்கும் விஷயம் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தான்.
டாப் நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்றவர்களின் சிறுவயது புகைப்படங்கள் எல்லாம் நிறைய வெளியாகிவிட்டது, ஆனால் அவர்களை தாண்டி நிறைய பிரபலங்களில் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம்.
கொரோனா காலத்திற்கு பிறகு சினிமாவில் நடிகராக, இசையமைப்பாளராக என கலக்கும் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அப்படி இப்போதும் ஒரு பிரபல நாயகியின் சிறுவயது போட்டோ வெளியாகியுள்ளது.
யார் இவர்
இந்த நடிகை தெலுங்கில் ஒரு ஹிட் படத்தை கொடுக்க அடுத்தடுத்து டாப் நாயகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்துவந்தார். தமிழில் கூட விஜய்யின் படத்தில் நாயகியாக நடித்தார்.
ஆனால் அதில் என்ன சோகம் என்றால் அவர் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் பிளாப் லிஸ்டில் உள்ளது. விரைவில் அவர் பெரிய ஹிட் படம் கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டோவில் இருக்கும் நடிகை வேறுயாரும் இல்லை நடிகை பூஜா ஹெக்டே தான்.