பாலிவுட்டை ஆட்டிப்படைக்கும் தென்னிந்திய திரைப்படங்கள்.. நம்பர் 1, நம்பர் 2 இடத்தை பிடித்து சாதனை
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப் 2.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மாபெரும் எதிர்பார்ப்பில் இப்படம் வெளிவந்தது. அதே போல் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்தது.
வசூல் மழையில் கே.ஜி.எப் 2
முதல் நாள் மட்டுமே உலகளவில் சுமார் ரூ. 140 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போது உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வசூல் செய்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், தற்போது பாலிவுட் பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 373 கோடி வரை கே.ஜி.எப் 2 வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
பாலிவுட்டை ஆட்டிப்படைக்கும் தென்னிந்திய திரைப்படங்கள்
ஏற்கனவே பாலிவுட் பாக்ஸ் ஆபிசில் ரூ. 510 கோடி வசூல் செய்து பாகுபலி 2 முதலிடத்தையும், ரூ. 387 கோடி வசூல் செய்து தங்கல் திரைப்படம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
கே.ஜி.எப் 2 தற்போது வரை ரூ. 373 கோடி வசூல் செய்துள்ள நிலையில், விரைவில் கண்டிப்பாக தங்கல் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
