சிவாஜி குடும்பத்தை அப்படி விமர்சித்த SPB!... பல்லை உடைப்பேன் என மிரட்டிய நடிகர் திலகம்
இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி. இவர் கடந்த 2002 -ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
இவரின் நினைவு தினம் முன்னிட்டு ரசிகர்கள் நடிகர் திலகம் குறித்து வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த பாடகர் SBP, சிவாஜி குறித்து பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், " நான் ஒருமுறை சிவாஜியை சந்திக்க சென்று இருந்தேன். அப்போது அவர் என்னிடம், "என்னடா உடம்பு இது..இப்படி தார் டப்பா மாதிரி இருக்குற" என்று என்னை கிண்டல் அடித்தார்.
பதிலுக்கு நீங்க மட்டும் ஒல்லியாக இருக்கீங்களோ?..பிரபு மற்றும் ராம்குமார் எல்லாம் ரொம்ப ஒல்லியா இருக்காங்களா? என்று சிவாஜியிடம் கேட்டேன்.
அப்போது சிவாஜி, "ஏய் உன் பல்லை உடைப்பேன்" என எச்சரித்தார். அந்த சமயத்தில் அங்கு இருந்தவர்கள் நாங்கள் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் என்று நினைத்தார்கள். ஆனால் உண்மையில் நாங்கள் விளையாட்டாக பேசி கொண்டு இருந்தோம் என்று SBP கூறி இருந்தார்.

சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட உலக அழகி!.விடமால் பிடித்துக்கொண்ட 90ஸ் கனவுக்கன்னி சிம்ரன்
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri