ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை முன்னிட்டு டிவியில் ஒளிபரப்பாகும் புதுப்படங்கள்.. என்னென்ன?
பண்டிகை வந்தாலே ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருப்பது புதுப்படங்களுக்கு தான். எந்த டிவியில் என்ன என்ன புது படங்கள் வெளியாகும் என்ற ஆவலுடன் மக்கள் இருப்பர்.
அந்த வகையில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு தொலைக்காட்சியில் வெளிவரும் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
சன் டிவி:
ஆயுத பூஜை
சன் டிவியில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக அக்டோபர் 1ந் தேதி காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த அயலான் படம் ஒளிபரப்பாக உள்ளது. பின் மதியம் 3 மணிக்கு அஜித், தமன்னா நடித்த வீரம் படம் ஒளிபரப்பாகும்.
விஜயதசமி
விஜயதசமி அன்று சன் டிவியில் காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடித்த ருத்ரன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. மதியம் 3 மணிக்கு விஷால், சுனைனா நடிப்பில் உருவான லத்தி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவி:
ஆயுத பூஜை
விஜய் டிவியில் ஆயுத பூஜை முன்னிட்டு காலை 11.30 மணிக்கு அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான டிஎன்ஏ திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது. பின் மாலை 5 மணிக்கு சசிக்குமார், சிம்ரன் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
விஜயதசமி
விஜயதசமி காலை 11 மணிக்கு பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோகர் நடித்த டிராகன் படமும், மாலை 4.30 மணிக்கு கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த பிரம்மாண்ட பட்ஜெட் படமான தக் லைஃப் ஒளிபரப்பப்படும்.
ஜீ தமிழ்:
ஆயுத பூஜை
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 1ந் தேதி காலை 9.30 மணிக்கு சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம் திரைப்படம்.
காலை 11.30 மணிக்கு சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும், மதியம் 2 மணிக்கு விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
விஜயதசமி:
விஜய தசமி அன்று காலை 9.30 மணிக்கு அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த டிமாண்டி காலனி 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. மதியம் 2 மணிக்கு ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாகும்.