பெண்ணை தகாத முறையில் தொட்டு சீண்டிய 79 வயது Squid Game நடிகர்.. சிறை தண்டனை!!
Squid Game
ஹாலிவுட் படங்களை காட்டிலும் சினிமா ரசிகர்கள் கொரியன் படங்களை உற்று கவனித்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த Squid Game வெப் தொடருக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். இந்த வெப் தொடரில் 79 வயதான ஓ யங் சூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.
சிறை தண்டனை!
கடந்த 2017 -ம் ஆண்டு பெண் ஒருவர் ஓ யங் சூ மீது பாலியல் குற்றச்சாற்று வைத்தார். அதில், ஓ யங் சூ தன்னை தகாத முறையில் தொட்டு முத்தம் கொடுத்தார் என்று புகார் அளித்தார்.
இதற்கு ஓ யங் சூ, "எனது கடைசி காலகட்டத்தில் இப்படியொரு குற்றச்சாற்று முன் வைப்பது கடினமாக இருக்கிறது" என்று வேதனை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ஓ யங் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.