பணக்காரனுக்கு சாதி இல்லை.. கெட்டி மேளம் சீரியல் நடிகை ஸ்ரீகுமார் ஓபன் டாக்
ஸ்ரீகுமார்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களின் மகன் ஆவார்.

ஆனந்தம், மலர்கள், யாரடி நீ மோகினி, வானத்தை போல போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் சீரியலில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி ஜோடி நம்பர் 1 சீசன் 2, மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகுமார் ஓபன் டாக்
இந்நிலையில், சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் ஸ்ரீகுமார், பணக்காரனிடம் சாதி பார்க்க மாட்டார்கள் என பேசிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

இதில் அவர், "நாம ஏழையா இருந்தா நம்மகிட்ட சாதி பாப்பாங்க, ஆனா நாம பணக்காரன் ஆகிட்டா அப்போ யாரும் சாதிய பத்தி பேச மாட்டாங்க. என் அப்பா ஒரு SC அப்படிக்கறதால ஈய தட்டில் சாப்பிட்டுதான் இசையமைப்பாளரா வளர்ந்தாரு அந்த காலத்துல" என கூறியுள்ளார்.
திமுகவுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி! அ.தி.மு.க. ஒரு கட்சியே கிடையாது: செங்கோட்டையன் IBC Tamilnadu
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri