நடிகை ஸ்ரீலீலா வருத்தம்...என் வாழ்க்கையில் அந்த விஷயத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டேன்...
ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா, பெயரை சொன்னாலே இளைஞர்கள் அனைவரும் குஷியாகிவிடுவார்கள், காரணம் இன்றைய சினிமா ரசிகர்களின் பேவரெட் கனவுக் கன்னியாக இவர் வலம் வருகிறார்.
இளம் வயதிலேயே பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர், டீன் ஏஜ் வயதிலேயே இவ்வளவு பெரிய பிரபலத்தை அடைந்த நடிகைகள் மிகக் குறைவு தான். தனது 23 வயதிலேயே தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் நடித்து வந்தவர் கைவசம் இப்போது பெரிய அளவில் தெலுங்கில் படங்கள் கைவசம் இல்லை. ஆனால் தமிழ் மற்றும் ஹிந்தியில் பிஸியாக படங்கள் கமிட்டாகியுள்ளார்.
தனுஷின் ஓம், ரஜினியின் தர்மன், அஜித்தின் டேர் டெவில், பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஒரு படம் என கமிட்டாகியுள்ளார்.

வருத்தம்
நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் ஒரு பேட்டியில், தனது திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் தவறுசெய்து விட்டேன் என வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

என்னை தேடி வந்த எல்லா படங்களிலும் நடித்தேன், இப்போது திரும்பிப் பார்க்கும் போது நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியதாக கூறியுள்ளார்.