கடை திறப்பு விழாவுக்கு சேலையில் வந்த நடிகை ஸ்ரீலீலா.. ரசிகர்களுக்காக செய்த விஷயத்தை பாருங்க
நடிகை ஸ்ரீலீலா தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நிலையில் விரைவில் ஹிந்தியிலும் கால்பதிக்க இருக்கிறார். அதனால் அவரது மார்க்கெட் இன்னும் உச்சம் தொடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீலீலா படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட விளம்பரங்கள், இன்ஸ்டா ஸ்பான்சர் பதிவுகள், கடை திறப்பு விழாக்கள் போன்றவைகள் மூலமாக பெரிய அளவில் சம்பாதிக்கிறார்.

கடை திறப்பு விழா
இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் ஒரு துணி கடை திறப்பு விழாவுக்கு ஸ்ரீலீலா வந்திருக்கிறார். அவரை நேரில் பார்க்க அதிகம் ரசிகர்கள் அங்கே கூடிவிட்டனர்.
அவர்களுக்காக ஸ்ரீலீலா கார் சன் ரூப் வழியாக ஏறி ரசிகர்களுக்கு கையசைத்து இருக்கிறார். மேலும் மேடையில் ஸ்ரீலீலா ரசிகர்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.