ஸ்ரீலீலா காதல் கிசுகிசு உண்மையா.. திருமணம் பற்றி அவரே கொடுத்த பதில் இதோ
நடிகை ஸ்ரீலீலா தென்னிந்தியாவில் சென்சேஷன் நடிகையாக மாறி இருக்கிறார். அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஹிந்தியிலும் அவர் களமிறங்கி நடித்து வருகிறார். அடுத்தடுத்து அவருக்கு பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகளும் வருகிறது.
திருமணம்
ஸ்ரீலீலா ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் உடன் காதலில் இருப்பதாக தொடர்ந்து கிசுகிசு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இது பற்றி ஸ்ரீலீலா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
தான் யாரையும் தற்போது காதலிக்கவில்லை என்றும் இன்னும் 10 வருடங்களுக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். மேலும் தான் எங்கு சென்றாலும் அம்மா உடன் தான் வருகிறார், நான் எப்படி காதலில் விழ முடியும் எனவும் அவர் கேட்டிருக்கிறார்.

