இந்தியில் அறிமுகமாகும் ஸ்ரீலீலா.. யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா, வீடியோ இதோ
நடிகை ஸ்ரீலீலா
தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகை ஸ்ரீலீலா. தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான இவர் பின் தனது நடனத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தார்.
தமிழ் சினிமாவில் இவருடைய வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்தியில் அறிமுகம்
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் சினிமாவில் களமிறங்கியுள்ள ஸ்ரீலீலா, இயக்குநர் அனுராக் பாசு இயக்கத்தில் உருவாகும் புதிய இந்தி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், படம் குறித்த அறிவிப்பு வீடியோ மட்டும் வெளியிட்டுள்ளனர். இதோ நீங்களே பாருங்க..

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
