விஜய் உடன் ஆட மறுத்து, தமிழில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை ஸ்ரீலிலா.. யார் தெரியுமா?
தளபதி விஜய்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து பிரமாண்டமாக வெளிவந்த படம் GOAT.
இந்த படத்தில் பல ட்விஸ்ட் இருந்த நிலையில், விஜய் உடன் த்ரிஷா 'மட்ட' என்ற ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இந்த படத்தில் முதலில் த்ரிஷாவுக்கு பதில் இளம் நடிகை ஸ்ரீலீலாவை தான் வெங்கட் பிரபு அணுகி இருந்தார்.

ஆனால் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட விருப்பம் இல்லை என ஸ்ரீலிலா மறுத்துவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரை தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
முன்னணி நடிகருடன் இணையும் ஸ்ரீலிலா
ஆனால் தற்போது வந்த தகவலின் படி சிவகார்த்திகேயனின் ஜோடியாக இயக்குனர் சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் எனவும், படப்பிடிப்பு தேதிகள், சம்பளம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
ரஷ்யாவுக்குள் அத்துமீறி சீறிப்பாய்ந்த 11 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்ய பாதுகாப்பு படை அதிரடி News Lankasri