இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
ஸ்ரீலீலா
நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரீலீலா. கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 திரைப்படத்தில் கூட, ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அதே போல் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தில் கார்த்திக் ஆர்யன் உடன் இணைந்து நடித்து வருகிறார். இருவரும் இணைந்து நடித்து வரும் நிலையில் கார்த்திக் ஆர்யன் - ஸ்ரீலீலா இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
சொத்து மதிப்பு
நேற்று நடிகை ஸ்ரீலீலா தனது 24வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 கோடி இருக்கும் என்கின்றனர். மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 4 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
