புஷ்பா 2 படத்தின் ’கிஸ்ஸிக்’ பாடல், தாக்கத்தை ஏற்படுத்தியது.. ஓப்பனாக சொன்ன ஸ்ரீலீலா!
ஸ்ரீலீலா
நடனம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரீலீலா. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
அதே போல் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ’கிஸ்ஸிக்' என்ற ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.
இந்த பாடல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

ஓபன் டாக்!
இந்நிலையில், இப்பாடல் குறித்து ஸ்ரீலீலா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " புஷ்பா படத்தில் அந்த பாடலுக்கு நான் ஆடிய நடனம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவ்வளவு பெரிய படத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன். அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் போன்ற திறமையானவர்களுடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவம்" என்று தெரிவித்துள்ளார்.
