தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் நடிப்பது.. நடிகை ஸ்ரீலீலா ஓபன் டாக்
ஸ்ரீலீலா
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.
ஓபன் டாக்
இந்நிலையில், தனது சினிமா பயணம் குறித்து நடிகை ஸ்ரீலீலா பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " சினிமாவில் இத்தனை ரசிகர்களை சம்பாதித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தற்போது, தெலுங்கு சினிமா தாண்டி தமிழில் முதன் முறையாக 'பராசக்தி' படத்தில் நடித்துள்ளேன்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அதேபோல் பாலிவுட் சினிமாவிலும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
