எப்படி அரேஞ்ச் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டீங்க.. மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்
ஸ்ரீதேவி விஜயகுமார்
50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் துறையில் பயணித்து வருபவர் நடிகர் விஜயகுமார். இவருடைய மகள் ஸ்ரீதேவி விஜயகுமார், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தெலுங்கு சினிமா மூலம் கதாநாயகியாக களமிறங்கினார்.
ஹீரோயினாக முதல் படத்திலேயே பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தமிழில் தனுஷுடன் காதல் கொண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே என அழகிய படங்களை கொடுத்தார். 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ராகுல் - ஸ்ரீதேவி தம்பதிக்கு ரூபிகா என்கிற மகள் இருக்கிறார். இந்த நிலையில், தனது திருமணம் குறித்து நடிகை ஸ்ரீதேவி மனம் திறந்து பேசியுள்ளார்.
மனம் திறந்த ஸ்ரீதேவி
இதில் "எங்களது அரேஞ்சிடு மேரேஜ் தான். என்கிட்ட நிறைய பேரு எப்படி டக்குனு அரேஞ்ச்டு மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டீங்க என கேட்டு இருக்காங்க. அதற்கு காரணம், எங்க அப்பா அம்மா ஒரு வயசு வரைக்கும் நடி, அதற்குப் பின் கல்யாணம் தான் என எப்போதும் தெளிவாக இருந்தார்கள். அப்பா எது சொன்னாலும் நான் மீற மாட்டேன். அதனால் நான் ஏற்கனவே அதற்கு தயாராக இருந்தேன். அப்பா அம்மா சொல்றாங்கன்னா கண்டிப்பா அது நல்லதுக்கு தான் என ஒரு நம்பிக்கை. கடவுள் புண்ணியத்துல அது எனக்கு நல்லபடியா அமைஞ்சிருச்சு" என அவர் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகிய ஸ்ரீதேவி, அவ்வப்போது சில திரைப்படங்களில் மட்டுமே தலைகாட்டி வருகிறார். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
