அவருடன் இருந்த நிமிடங்களும் இன்னும் என் நியாபகத்தில் உள்ளது - இலங்கை பிரபலம் நடிகை மதுரா பேச்சு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்பட இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 19 அன்று திரைக்கு வந்த படம்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடித்துள்ளனர். படம் இலங்கை அகதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.
விஜய் சேதுபதியின் நடிப்பு படத்தை வெற்றி பெற செய்தது. இப்படத்தில் "ஜெஸி" எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மதுரா, இவர் ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்.
தற்போது அளித்துள்ள பேட்டியில், யாதும் ஊரே படத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். விவேக்குடன் நடித்த அனுபவம் எவ்வாறு இருந்தது என்ற கேள்விக்கு, எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்த பிறகு விவேக்குடன் நடிக்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருந்தது, அது நிறைவேறி விட்டது.
மேலும் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது பேரானந்தம். விவேக் படப்பிடிப்பின் போது இடைவேளை சமயத்தில் முதல்வன் படத்திலிருந்து பாடல் ஒன்றை பியானோவில் வாசித்துக் காண்பித்தார்.
பல இளையராஜா பாடல்கள் வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரின் இழப்பு மிகுந்த வேதனை அளித்தது, அவருடன் பேசியது, பழகியது என அனைத்தும் இன்னும் என் மனதில் உள்ளது என கூறினார்.
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகர், நடிகைகள் நிஜ பெயர் என்ன தெரியுமா?? இதோ முழு விவரம் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    