மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகர், நடிகைகள் நிஜ பெயர் என்ன தெரியுமா?? இதோ முழு விவரம்
மீனாட்சி பொண்ணுங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "மீனாட்சி பொண்ணுங்க" எனும் தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முத்துக்குமாரசாமி இயக்கி வரும் இத்தொடர் 250 எபிசோடுகள் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று ஒளிபரப்பு தொடங்கி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த தொடர் கணவனால் கைவிடப்பட்ட பெண் மீனாட்சி தன்னுடைய மூன்று மகளான சக்தி, யமுனா, கங்கா-வை மெஸ் ஒன்றை நடத்திக் கொண்டு அவர்களின் கனவை நிறைவேற்ற போராடுகிறார்.
நடிகர்களின் நிஜ பெயர்:
மீனாட்சி - அர்ச்சனா
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இரண்டு தேசிய விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி - மோக்ஷிதா பாய் (2022)/ சௌந்தர்யா ரெட்டி (தற்போது)
சக்தி எனும் கதாபாத்திரத்தில் மோக்ஷிதா நடித்து வர திடிரென அவர் சீரியலை விட்டு விலகியதால் அவருக்கு பதில் சௌந்தர்யா ரெட்டி நடித்து வருகிறார்.
சௌந்தர்யா தெலுங்கு மற்றும் கன்னட தொடர்களில் நடித்து வந்தார். தற்போது "மீனாட்சி பொண்ணுங்க" தொடர் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

யமுனா - காயத்ரி
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காயத்ரி. ரியாலிட்டி ஷோ மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த தொடரில் மீனாட்சியின் மூத்த மகளாக நடிக்கிறார்.

சாந்தா - தீபா சங்கர்
இவர் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். "மெட்டி ஒளி" எனும் நெடுந்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின் பல தொடர்களிலும், படங்களிலும் நடித்துள்ளார்.

ஆர்யன் - வெற்றி
இவர் பிரபல தொலைக்காட்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். பிரபல நடிகை ஷபானாவை காதலித்து கரம் பிடித்தார்
இவர் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் எனும் துணை கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். அதிலிருந்து விலகி தற்போது "மீனாட்சி பொண்ணுங்க" எனும் தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

துர்க்கா - பிரணிகா தக்ஷு
இவர் தனது வாழ்க்கையை குறும்படம் மட்டும் வீடியோ தொடர் மூலம் தொடங்கினர். "பாவம் கணேசன்" எனும் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது "மீனாட்சி பொண்ணுங்க" என்னும் தொடரில் நடித்து வருகிறார்.

தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இப்படி தான் எடுக்க போகிறாரா.. அவரே கூறிய தகவல்
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu