VJ சித்ராவுக்கு நடந்தது நக்ஷத்ராவுக்கு நடக்கலாம்: அதிர்ச்சி தகவல் சொன்ன ஸ்ரீநிதி
விஜய் டிவி நடிகை விஜே சித்ரா தவறான நபரை திருமணம் செய்துகொண்டதால் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொண்டார், அது போல நடிகை நக்ஷத்திராவுக்கும் நடக்காலம் என சீரியல் நடிகை ஸ்ரீநிதி இன்ஸ்டா லைவ் வீடியோவில் கூறி ஷாக் கொடுத்து இருக்கிறார்.
"நக்ஷத்திரா என் வீட்டில் தான் இரண்டு வருடங்கள் இருந்தார். கடந்த வருடம் டிசம்பரில் அவருக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் நக்ஷத்திரா இருக்கிறார். என்னை சந்திக்க விடுவதில்லை. அதனால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன்."
"விஜே சித்து தவறான ரிலேஷன்ஷிப்பை தேர்வு செய்ததால் அவருக்கு நடந்தது நக்ஷத்திராவுக்கும் நடக்கலாம். நான் இப்போதே இதை சொல்வது அதனால் தான்."

"அவர் நிச்சயம் செய்தவரின் குடும்பத்தினர் என்னை தாக்கினார்கள். அது எனக்கு பிரச்சனை இல்லை. நக்ஷத்திராவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்."
"அவர் இறந்தால் கூட அவரது சாவுக்கு நான் செல்லமாட்டேன்" எனவும் ஸ்ரீநிதி கூறி இருக்கிறார்.