ஜனநாயகன் ஆதரவாக குரல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்! சென்சார் போர்டு, பாஜகவுக்கு எதிராக பதிவு
விஜய்யின் ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் CBFC போர்டு சென்சார் சான்றிதழ் தராததால் ரிலீஸ் தடைப்பட்டு இருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் ரிலீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து இருக்கும் நிலையில், ஜனநாயகன் தயாரிப்பாளர் தரப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் X தள பதிவு
இந்நிலையில் சென்சார் போர்டு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அவர் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக பேசி இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
"CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்" என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
#CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!#CBFC
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 9, 2026
ஈரானில் வலுக்கும் போராட்டங்கள்... நாட்டில் இருந்து தப்பிக்க உயர் தலைவர் அலி காமெனி திட்டம் News Lankasri
உக்ரைனின் ஓரெஷ்னிக் தாக்குதலுக்கு ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் கண்டனம் News Lankasri