இரண்டு நாட்களில் ஸ்டார் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஸ்டார்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கவின். டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஸ்டார்.
இளன் இயக்கிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் கவினின் தந்தையாக லால் நடித்திருந்தார். மேலும் அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகிய இளம் நடிகைகள் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
இரண்டு நாள் வசூல் விவரம்
முதல் நாளே இப்படம் ரூ. 4 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில் ஸ்டார் திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, கவினின் ஸ்டார் திரைப்படம் உலகளவில் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூல் என்கின்றனர்.
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri