உண்மையில் தனுஷ் - ஐஸ்வர்யா பிரியவில்லையா! இன்னும் ஒன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்களா
தனுஷ் - ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இவர்களுடைய விவாகரத்து செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இவர்கள் இருவரும் பிரியவில்லை என்றும், இன்னும் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார்.
இருவரும் பிரியவில்லையா
இந்த விவாகரத்து என்பதே ஒரு ஏற்பாடு தான். தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தற்போது கூட போனில் நன்றாக பேசி கொள்கிறார்களாம். வாட்சப்பில் கூட பேசிக்கொண்டு தான் இருக்கிறார்களாம்.
தனுஷ் தான் வாங்கியுள்ள பல கோடி சொத்துக்களை மனைவி ஐஸ்வர்யா பெயரில் இணைத்து தான் வாங்கியிருக்கிறாராம். விவாகரத்து செய்தி வந்தபோது, அதை அப்படியே இருக்கட்டும் என கூறிவிட்டாராம்.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து 2கே கிட்ஸ் கூறும் வகையில் சிச்சுவேஷன்ஷிப் என்ற பெயரிலேயே நடத்திருப்பதாகவும், இதை தனுஷின் நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாகவும், அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.