பாகுபலி படத்தை போன்று பிரமாண்டமாக உருவாகும் STR 48!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
STR 48
நடிகர் சிம்புவின் 48-வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல், அவ்வப்போது சிம்பு ஜிம்மில் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மட்டுமே வந்து கொண்டு இருந்தது. படம் குறித்து எந்த ஒரு அப்டேட் இல்லாததால் சிம்பு ரசிகர்கள் அப்செட்டில் இருந்தார்கள்.
பாகுபலியா?
இந்நிலையில் STR 48 படம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் இந்த படத்தை பாகுபலி போன்று பிரமாண்ட பீரியாடிக் படமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் மார்ச் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளனராம்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
