தயாரிப்பாளரான சிம்பு.. பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் STR 50 படத்தின் அறிவிப்பு
சிம்பு
இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதால் அவருடைய படங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.
ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்து அறிவிப்பு வெளிவந்த நிலையில், நேற்று ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் STR 49 படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.
STR 50 அறிவிப்பு
இந்த நிலையில், இன்று STR 50 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள திரைப்படம் STR. சரித்திர கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை சிம்பு தனது ஆத்மேன் சீனி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.
மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார் என அறிவித்துள்ளனர். STR 48-ஆக உருவாகவிருந்த திரைப்படம்தான் தற்போது STR 50-ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.