ஐஸ்வர்யாவுடன் இணைகிறேனா? வைரலான செய்திக்கு STR தரப்பு சொன்ன விளக்கம்
தனுஷை விவாகரத்து செய்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக தனது கெரியரில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
ஐஸ்வர்யா விவாகரத்து
தனுஷ் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து தங்கள் விவகாரத்தை அறிவித்தனர். அவர்கள் இந்த முடிவெடுத்தது மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
அவர்களை மீண்டும் இணைக்க குடும்பத்தினர் முயற்சித்து வரும் நிலையில், இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷ் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார், அதே போல ஐஸ்வர்யாவும் நான்கு மொழிகளில் வெளியாகும் ஆல்பம் பாடலை இயக்கி வந்தார்.
சிம்புவை இயக்கும் ஐஸ்வர்யா?
மேலும் ஐஸ்வர்யா ஒரு படத்தை இயக்குகிறார் என்றும் அதில் சிம்பு தான் ஹீரோ என்றும் சமீபத்தில் தகவல் பரவியது. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது அது பற்றி விளக்கம் கிடைத்து இருக்கிறது.
ஐஸ்வர்யா படத்தில் சிம்பு நடிக்கவில்லை என சிம்பு தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதனால் இந்த செய்தி முழுமையாக வதந்தி என தெரியவந்திருக்கிறது.
நயன்தாரா திருமணம் முடிந்துவிட்டதா? நெற்றியில் பொட்டுடன் இருக்கும் வீடியோ வைரல்a
