மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி வைத்த கோரிக்கை.. உடனே ஏற்ற முதலமைச்சர்! அரசனை வெளியீடு

By Parthiban.A May 01, 2022 06:30 AM GMT
Report

காமெடியோடு சேர்த்து சமூக அக்கறை உள்ள கருத்துக்களும் மக்களுக்கு சொன்னவர் நடிகர் விவேக். அவர் கடந்த வருடம் ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவேக் இறந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் நிலையில் சமீபத்தில் விவேக் மனைவி மற்றும் குடும்பத்தினர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். விவேக் நினைவாக அவர் வீடு இருக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அதற்கான அரசாணையை வெளியிட உத்தரவிட்டு உள்ளார். மே 3ம் தேதி பெயர் பலகை திறந்து வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று சென்னை ஆழ்வார்திருநகரில் நடந்த விழா ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US