வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுதா கொங்கரா! பிரம்மாண்ட படத்தில் இவர் தான் ஹீரோ..
முக்கிய இயக்குனரான சுதா கொங்கரா
இயக்குனர் சுதா கொங்கரா தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர், இவர் இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியடைந்துள்ளது.
மேலும் தற்போது சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தி ரீமேக் செய்து வருவதால், அப்படத்தின் வேலைகளில் மும்மரமாக இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தை KGF படங்களை தயாரித்த Hombale Films தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
பிரம்மாண்ட படத்தின் கதாநாயகன்
பிரம்மாண்டமாக உருவாகவுள்ள அப்படத்தில் யார் கதாநாயகன் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் அப்படத்தில் ரக்ஷித் ஷெட்டி, அஜித் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க வாய்ப்பிருப்பதாக பல்வேறு தகவல்கள் பரவின.
ஆனால் தற்போது சுதா கொங்கரா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், சூர்யாவுடன் அடுத்த படத்தில் நான் கண்டிப்பாக பணியாற்றவுள்ளேன். அப்படம் சூரரை போற்று படத்தை விட பலமடங்கு பெரியது, ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய படமாக அது இருக்கும்.
மேலும் அப்படத்தில் குறைந்தது ஐந்து அல்லது மூன்று வருடங்கள் பணியாற்ற இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கையில் சுதா கொங்கரா ஹிந்தி படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் படத்தை தான் அடுத்து இயக்கவுள்ளார்.
Hombale Films தங்களின் அடுத்த படம் சுதா கொங்கரா இயக்குவார் என அறிவித்தே விட்டனர், எனவே நிச்சயம் அது சூர்யா - சுதா கொங்கரா படமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
சமந்தா கோபமான ட்விட்! நாக சைதன்யா இரண்டாம் திருமணம் பற்றிதானா?

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
