கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சூர்யா கிடையாது ! முக்கிய தமிழ் நடிகரை தேர்ந்தெடுத்த சுதா கொங்கரா

By Jeeva Jul 20, 2022 10:30 AM GMT
Report

சுதா கொங்கரா படத்தை தயாரிக்கும் Hombale Films

இயக்குநர் சுதா கொங்கரா தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சூரரை போற்று திரைப்படத்திற்கு இந்தியளவில் வரவேற்பை கிடைத்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே கே.ஜி.எப் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த Hombale Films தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் குறித்து எந்தஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சூர்யா கிடையாது ! முக்கிய தமிழ் நடிகரை தேர்ந்தெடுத்த சுதா கொங்கரா | Sudha Next With Not Suriya

நடிகர் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது கூறப்பட்டது. மேலும் தற்போது Hombale Films தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சிம்பு தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பின்பே சிம்பு இப்படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. சிம்பு படத்தை இயக்கிய பிறகு தான் சுதா கொங்கரா சூர்யாவின் படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சூர்யா கிடையாது ! முக்கிய தமிழ் நடிகரை தேர்ந்தெடுத்த சுதா கொங்கரா | Sudha Next With Not Suriya

தொகுப்பாளினி அஞ்சனா வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு- ரோட்டில் நின்று கதறி கதறி அழும் பிரபலம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US