இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை சுஜிதா தான். ஆம், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதாவின் சிறு வயது புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.
நடிகை சுஜிதா சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார். வாலி படத்தில் அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் கூட சுஜிதான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.